ரியல் எஸ்டேட் தொழிலில் எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள்?
ரியல் எஸ்டேட் என்பது மிகப் பெரிய அளவில் பணம் புரளும் பிஸினெஸ்.
கடந்த 7–8 வருடங்களாகவே மக்களிடம் பணப்புளக்கம் மிகவும் குறைந்து விட்டது. அதனால் ரியல் எஸ்டேட் துறையும் மிகவும் நலிவடைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
இது கூடுதலாக இந்த துறையினரை பாதித்ததால் கூடுதலாக விற்பனை யுக்த்தி என்னும் பேரில் பின் வரும் ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து வருகின்றன.
முக்கியமான நகருக்கருகில் என்று கூவி அழைத்து உள்ளே ஒரு ஒதுக்குப் புறத்திலுள்ளதை நம் தலையில் கட்ட முயற்சிப்பர்.
(உ.ம்) தாம்பரத்திலிருந்து 15 நிமிட பயண தூரம் என்று சொல்லி, கிட்டத்தட்ட செங்கற்பட்டுக்கு அருகாமைக்கு கூட்டிச் செல்வர்.
வீடாக கட்டி விற்பதில் ஃப்ரன்ட் எலிவேஷனை மாடலாக கட்டி காட்டி விட்டு ,தரம் குறைந்த , non framed structure, பிளாஸ்டிக் UPVC ஜன்னல் டோர்களை மாட்டி ஏமாற்றுவர்.
தரமற்ற இரண்டாம் இரக டைலஸ்,முக்கியமாக ஜாயின்ட் பேஸ்ட் ஒழுங்காக செய்யாமல் சில மாதங்களிலே பக்க சுவர்,கீழ் தளங்களிலே ஒழுகல் என பிரச்சனைகளை உருவாகும்படி கொடுத்து விடுவர்.
இடத்தின் விலையை 1 1/2 முதல் இரண்டு மடங்கு உயர்த்தி காண்பித்து கட்டிட விலையை அதிகமாக காண்பிப்பர்.
சும்மாவாவது பக்கத்திலே மிகப்பெரிய கல்லூரி, பை பாஸ் சாலை, மால் வருகிறது என்று ஏமாற்றி விற்க முயற்சிப்பர்.
அடுத்த மாதம் அரசாங்கம் இதை உயர்த்துகிறது அதை உயர்த்துகிறது என சொல்லி நம் தலையில் கட்டிவிடுவர். உண்மையில் அது போன்று இருந்தால் அவர்கள் அதுபோன்ற சட்டம் வர காத்திருந்து அதிக விலைக்குத்தான் விற்கப்பார்பர்.
எவனாவது ஒருவர் ஏமாந்து அல்லது கருப்பு பணத்தினால் அதிக விலை கொடுத்திருந்தால்,அதை காண்பித்து அடுத்தவரை ஏமாற்ற முயற்சிப்பர்.
அப்ரூவல் வருவதற்கு முன்னே நமக்கு விற்று விட்டு ,சமயத்தில் ஏதும் பிரச்சனை என்றால் ஓடி ஒளிந்து விடுவர்.
இன்றைக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்று கவர்ச்சிகரமாக ஏமாற்றி நம் முடிவை உடனே செய்யத் தூண்டுவர்.
தயவு செய்து இனாமாக கொடுக்கும் பொருட்களுக்கு ஆசைப் படாதீர்கள். அதனால் தேவையில்லாமல் அதிக விலையைக் கொடுக்க நேரிடும்.
கூடியமட்டும் இடைத்தரகர்களை தவிர்க்கவும்.தவிர்க்கமுடியாத கட்டத்தில் அவர்களின் வீண் ஜம்பங்களை நம்பாதீர்கள். எல்லா சந்தேகங்களையும் நேரடியாக உரிமையாளரிடம் பேசி உறுதி செய்து கொள்ளுங்கள்.
வீடாக வாங்குவோர் குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கான பராமரிப்பை பில்டர் பார்க்குமாறு ஒப்பந்தம் செய்து கொண்டால் குறைகளை நிவிர்த்தி செய்வது எளிதாக இருக்கும்.
வீடோ,இடமோ,அடுக்குமாடியோ வாங்கும்போது நம்முடைய ஆர்வத்தை (அடக்கி வாசிக்கவும்)அவர்களிடம் தயவுசெய்து வெளிக்காட்டாதீர்கள். அப்படி காட்டினால் பேரம் பேசுவது மிகச் சிரமம்.