கந்தன் அருளால் இந்த நாள் இனிய நாள்...
மன அழுத்தம் மரணத்தை விட கொடியது. நிறைய பேர்
சொல்வாங்க டிப்ரஷன்ல இருக்கே,ஸ்ட்ரெஸ் ஆகுதுன்னு
ஈஸியா கடந்து செல்லும் அந்த வார்த்தைகள் எவ்வளவு வலி மிகுந்தவை என்பது அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்.
உடல் நோவு கொண்டவர்களை விட பரிதாபத்திற்கு உரியவர்கள் இவர்கள். ஆனால் உடல் வலிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மன வலிக்கு யாரும் கொடுப்பதில்லை.
எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் அனுபவித்திருப்போம். அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனையும் வலியும். போட்டு கொன்றுவிடும், ஒரு வழி பண்ணிவிடும், புரட்டி எடுத்துவிடும்.
எப்படி எப்போது இதிலிருந்து வெளியே வர போகிறோம் என்று திக்கு தெரியாத காட்டில் வழி தவற விட்ட குருடன் போல கலங்கி மனதை கீறி ஒரு மாதிரி ஆக்கிவிடும். ஏறக்குறைய சட்டையை கிழித்துக் கொண்டு பைத்தியம்
பிடிக்காத குறையாக உயிர் உடம்பிலிருந்து போவது போல அப்படியே மனதை உருக்கி விடும். டிப்ரஷன் உணர்வு மரண வலி...
ஆமாவா இல்லையா...?
யார்கிட்ட காட்டனும்னு தெரியாம, யார்கிட்ட எப்படி பேசனும்னு தெரியாம, யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாம
ஒரு இருண்ட காட்டுக்குள் உதவி செய்ய ஒரு கரம் வராதா? சாய ஒரு மடி கிடைக்காதா? என்று நிற்கதியாக நிற்கும் நாட்கள் அவை.
எதிர்பாராத தோல்வி, கையில் பணம் இல்லாத இக்கட்டான சூழல், நெருங்கிய உறவுகளின் இழப்பு இப்படி ஏதாவது ஒரு சூழலை எதிர்கொண்ட தருணத்தை நினைத்து பாருங்கள்.
யாராவது எங்கிருந்தாவது ஒரு விரல்தொடாதா, சாய ஒரு தோள் கிடைக்காதா? என்று ஏங்கி ஏங்கி, தவித்து கத்தி கதறி அழுது புலம்பி... அதை எழுத்தில் கொண்டு வரமுடியாது.
யாராவது ஒருவர் இதை படிக்கும்போது அது போன்ற நிலையில் இருந்தால்
தயவு செய்து பதற வேண்டாம். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு மனதிற்குள்ளே இதை சொல்லிக் கொள்ளலாம்...
எல்லாம் சரியாயிடும். எனக்கென்ன குறை, பகவான் எப்போதும் என் கூடவே பக்க பலமாக இருக்கும் போது மனிதர்கள் ஆதரவு எதற்கு, கண்டிப்பா சரியாயிடும், பார்த்துக்கலாம், நாம பார்க்காத பிரச்னையா...
அவ்வளவு தான் மனம் சட்டென்று லேசாகி யானை பலம் வந்துவிடும். மனம் தெளிவானால் ஏதாவது ஒரு தீர்வும் தோன்றிவிடும். காலம் ஒரு சிறந்த மருத்துவன். எந்த மனக்காயத்தையும் ஆற்றும் மருந்து அவனிடம் உள்ளது முழுமையாக நம்புவோம்...
கந்தன் அருளால் இந்த நாள் இனிய நாள்...