இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.
ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது.
சிலகாட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார்.
“சார்…. அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அல்லவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன்.
என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது.
“என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடில அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு? டேஸ்ட் என்ன? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….”
அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரல. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் ஓராயிரம் அர்த்தம் சொல்லியது.
கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிரும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார்.
எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.
சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு.
எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன்.
“மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”
“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.”
நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்.”
“வெளில சாப்பிட்டுட்டேன்”.
“ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”.
“வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.”
எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது.
சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்டி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது.
கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே.
இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாற்றுமே..!!!!!
“உணவே மருந்து இதயத்திற்கும்”
போனா மாசம் நானும் நண்பனும் சினிமாக்கு போனோம், அவன் Tshirt போட்டுட்டு வந்தான், பாக்கெட் இல்ல, அதனால மொபைல எடுத்து ரெண்டு காலுக்கு நடுவுல வெச்சிட்டான், படம் முடிஞ்சி எழுந்து வரும் போது பயபுள்ள மொபைல் மறந்து சீட்லயே வெச்சிட்டு வந்துடிச்சி, தியேட்டர்ல இருந்து வெளிய வந்து உடனே மொபைல் காணோம் சீட்லயே வெச்சிட்டேன்னு சொல்ல, உடனே அவன் நம்பருக்கு call பண்ணா switch off, அதுக்குள்ள யாரோ எடுத்து switch off பண்ணிட்டு இருக்காங்க அவளோ சீக்கிரம், புது மொபைல் வாங்கி 10 நாள் தான் ஆகுது 32,000ரூ.
எங்க ஏரியா DSP officeல கூட படிச்சவன் ஒருத்தன் technical operaterஆ இருக்கான், அவன் கிட்ட விஷயத்தை சொன்னேன்,
ஸ்டேஷன் போ, SI பாரு, அவரு என் friend தான், நான் விஷயத்தை அவருக்கு call பண்ணி சொல்றேன்,
ஒரு complaint மட்டும் குடுத்து CSR வாங்கிக்கோ, மொபைல் வாங்கின bill & box அப்படியே இங்க கொண்டுவானு சொன்னான்.
அவன் சொன்னா மாதிரியே SI பாத்து, complaint குடுத்துட்டு, மொபைல் வாங்கின bill & box அவன் கிட்ட கொண்டு போனோன்.
DSP office உள்ள அவனுக்குனு ஒரு தனி room குடுத்து இருக்காங்க, அதுல சில computer இருக்கு, அதுல இந்த சினிமால காட்டுறா மாதிரி வேற ஏதோ மிஷின் எல்லாம் connect பண்ணி இருந்துச்சி, கலர் கலரா லைட் எறிஞ்சி எறிஞ்சி அனைஞ்சிக்கிட்டு இருந்துச்சி, என்னடா சினிமால காட்டுறா மாதிரி இருக்குனு அவனை கிண்டல் பண்ணேன். அந்த computerல, மொபைல் boxல இருந்தா IMEI நம்பரை டைப் பண்ணி ஏதோ option உள்ள போயி ok குடுத்தான்.
மொபைல் எடுத்துக்கிட்டு போனவன் இன்னும் அந்த மொபைல on பண்ணல, அவன் எப்போ on பண்ணாலும் எனக்கு இந்த computerல notification வரும் வந்தா நானே உன்ன கூப்பிடுறேன்னு சொல்லி என்ன அனுப்பிட்டான்.
அடிக்கடி அவனுக்கு call பண்ணி கேப்பேன் மொபைல் on ஆச்சனு, இன்னும் இல்லனு சொல்லுவான், ஒரு வாரம் ஆச்சி, ரெண்டு வாரம் ஆச்சி மொபைல் on ஆகவே இல்ல, அவளோ தான் போச்சி போல இருக்குனு நினைச்சி விட்டுட்டேன்.
நேத்து திடீர்னனு call பண்ணி மொபைல் on ஆகி இருக்கு, officeக்கு வானு சொன்னான், நானும் மொபைல் தொலைச்ச நண்பரும் போனோம், ஒரு print எடுத்து கைல குடுத்தான், அந்த மொபைல் on ஆகி இருக்கு,
1) அதுல என்ன sim போட்டு இருக்கு,
2) அந்த sim யாரு பேருல இருக்கு,
3)எந்த address குடுத்து அந்த sim வாங்கி இருகாங்க,
4)அந்த sim ல இருந்து யார் யாருக்கு call போயி இருக்கு, யார் யாரு அந்த sim க்கு call பண்ணி இருகாங்க, மொத்த தகவலும் இருந்துச்சி அந்த printல.
அவனே SIக்கு call பண்ணி தகவலை சொன்னான், அவரும் வந்துட்டாரு, கூட ஒரு போலீஸ் கூட்டிகிட்டார் muftiல, car எடுத்துக்கிட்டு, 4 பேரும் அந்த print outல இருக்குற addressக்கு போனோம், ஒரு 15km distance தான்.
அங்க தான் பாத்தேன் போலீஸ் எப்படி மூளை use பண்றாங்கனு, நேர அவன் வீட்டுக்கு போன, ஒரு வேலை அவன் இல்லனா போலீஸ் வீட்டுக்கு வந்தது தெரிஞ்சா உஷார் ஆகிடுவான், அப்படினு சொல்லி, அந்த ஏரியா post office எங்கனு கேட்டு அங்க போக சொன்னாங்க.
Post office போயி post master கிட்ட விஷயத்தை சொல்லி, அந்த ஏரியா post men யாரு? அவர் பேரு என்னானு கேட்டு, என்னோட மொபைல் வாங்கி, அந்த மொபைல் எடுத்துக்கிட்டு போனவன் நம்பருக்கு call பண்ணாரு SI.
Call எடுத்தான், hello நான் post men பேசுறேன்னு சொல்லி அந்த ஏரியா post men பேரை சொன்னார் SI,
என்ன சொல்லுங்கனு சொன்னான் அவன்.
சேகர் நீங்க தானே?
ஆமா, என்ன விஷயம்?
உங்களுக்கு ஒரு gift box பார்சல் வந்து இருக்கு, வீட்டுல இருக்கீங்களா?
இல்லங்க நான் கொஞ்சம் வெளிய வந்து இருக்கேன் ஈவினிங் ஆகிடும் வர, நீங்க பார்சலை வீட்டுல குடுத்துடுங்க.
இது gift boxங்க நீங்க sign பண்ணி தான் வாங்கணும், வேற யார் கிட்டயும் முடியாது, 3 மணிக்குள்ள வாங்கலான return அனுப்பிடுவாங்க.
சரிங்க நான் ஒரு 30 நிமிஷத்துல வரேன்.
Post office க்கே வந்துடுங்க.
ஒரு 30 நிமிஷம் wait பண்ணோம், bike ல ஒருத்தன் வந்தான், நேர post office உள்ள போனான், அங்க muftiல இருந்த போலீஸ் வாங்க பார்சல் carல இருக்குனு சொல்லி எங்க car க்கு கூட்டிகிட்டு வந்தார், car door தொறந்ததும் உள்ள போலீஸ்.
Carல பின் சீட்ல அவனை நடுவுல உக்கார வெச்சிட்டு ஒரு பக்கம் SI, இன்னொரு பக்கம் muftiல வந்த போலீஸ், car எடுங்க ஸ்டேஷன் போங்கனு சொன்னார் SI, வெட வெடத்து வேர்த்து போச்சி அவனுக்கு, sir எதுக்கு sir, எதுக்கு sirனு கேட்டுகிட்டே வரான், அவனுக்கு ஒண்ணுமே புரியல.
அந்த மொபைல குடனு SI அவன் கைல இருந்து மொபைல் வாங்கினார், அவன் கிட்ட ஒரு நம்பரை காட்டி, இந்த நம்பருக்கு டெய்லி ரொம்ப நேரம் பேசுறியே யாருனு கேட்டார், பயபுள்ள மதுரைல யாரோ ஒரு ஆண்டி கிட்ட பேசிகிட்டு இருக்கு போல இருக்கு, அவங்க புருஷன் தான் போலீஸ் அனுப்பி நம்மள தூக்கிட்டாங்கனு ரொம்ப பயந்துட்டான்.
இந்த மொபைல் ஏதுனு SI கேட்டார் அவன் கிட்ட, அப்போ தான் அவனுக்கு போன உயிர் வந்துச்சி, மொபைல்க்கு தான் நம்மள தூக்கி இருக்காங்களா? அப்போ அந்த ஆண்டி மேட்டர்க்கு தூக்கலையானு.
மொபைல் பத்தி கேட்ட கேள்விக்கு அவன் ஒழுங்கா பதில் சொல்ல, கடைல வாங்கினேன், friend கிட்ட வாங்கினேன், used மொபைல் ஒருத்தன் கிட்ட வாங்கினேன்னு மாத்தி மாத்தி பேசினான், உடனே SI சொன்னாரு, ஒழுங்கா உண்மையா சொல்லிடு, இந்த மொபைல் காணோம்னு complaint குடுத்தவங்க, இது கூடவே 25 சவரன் நகை காணோம்னு குடுத்து இருக்காங்க, நீ உள்ள போயிடுவே பாத்துக்கனு சொன்னதும், அய்யயோ sir இந்த மொபைல் தியேட்டர்ல கிடைச்சது sirனு உண்மையை ஒத்துகிட்டன்.
அப்பறம் எங்க கிட்ட எழுதி வாங்கிக்கிட்டு மொபைல் குடுத்துட்டாங்க, இவன் மேல complaint குடுக்குறீங்களானு கேட்டார் SI, அவன் நம்ம கிட்ட இருந்து திருடல, நாம miss பண்ணிட்டோம், அவன் எடுத்துட்டான், அதனால complaint எதுவும் வேணாம்னு சொல்லிட்டோம், அவனை ஒரு நாள் fulla ஸ்டேஷன்ல உக்கார வெச்சி கண்டிச்சி அனுப்பி இருக்காங்க, இனிமே கீழ கிடைச்சா கூட அவன் மொபைல் எடுக்க மாட்டான்.
அப்பறம் DSP office ல help பண்ண நண்பனை போயி பாத்து, விஷயத்தை எல்லாம் சொன்னோம், அப்போ அவன் நிறைய விஷயம் சொன்னான்,
1) Face book id மட்டும் இல்லை, வேற எந்த social media idயை வெச்சி அவங்க மொபைல் நம்பர் எடுக்க முடியுமாம்.
fake id தானே வெச்சி இருக்கும்? யாருக்கு தெரிய போகுதுனு நினைக்காதீங்க fake id யா இருந்தா கூட அதை வெச்சி அவங்க மொபைல் நம்பர் எடுக்க முடியுமாம், நம்பரை எடுத்துட்டா, அதை வெச்சி பேரு, வீட்டு address, நாம யார் யார்க்கு call பண்ணி இருக்கோம், நமக்கு யாரெல்லாம் call பண்ணி இருக்காங்கனு மொத்த தகவலும் ஒரு நொடில print out எடுக்குறாங்க.
பிரச்சனை வராத வரைக்கும் ok, ஆனா social mediaல பிரச்சனைனு வந்தா நம்மள கிளீனா ஆளை தூக்கிடுவாங்க போல இருக்கு.
உஷார்.
Credit goes to vallavarayan