தருமி - Facebook post by raghu S kumar sanga
https://www.facebook.com/100004068143832/posts/pfbid02zsnSQubjFPqeoHQd5oBZ5xTHQ4ACSP2teF8uzXf5TeameXrxiWSFTBViAx9tYnmkl/
தருமி எனக்கு அனுப்பிய புத்தகங்கள்
'கடவுள் என்னும் மாயை’ புத்தகம் வாசித்த பிறகு தான் எழுத்தாளர் தருமி அவர்களின் தீவிர வாசகன் ஆனேன். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பும் கிடைத்தது. அருமையான மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். நான் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டே இருப்பார். “என் வாசிப்பு தேடலை நீங்கள் தான் விரிவுப்படுத்தினீர்கள்” என்று நான் சொன்னதற்கு சிரித்துக் கொண்டே “ஏம்ப்பா… பொய் சொல்லுறீங்க” என்றார். இவர் நக்கல் நையாண்டியாக பேசுபவரும் கலகலப்பானவரும் கூட.
ஆன்மீகத்தில் இது நிஜம், சரி என்று நாம் கடந்து போகும் சின்னஞ்சிறு விக்ஷயங்களையும் அலசி நிறைகளாக நாம் நினைத்துக் கொண்டிருந்த, ஆனால் அதன் உண்மையான நிலவரம் இதுதாம்பா (புத்தகம் வாசித்தவர்களுக்கு விளங்கும்) என்று தனது எழுத்தில் தருமி அவர்கள் விளக்கியுள்ளார். வாசித்த பிறகு ஆன்மீகத்தை பற்றிய என் பார்வையை அலசினேன். இவ்வாறாக ஆன்மீகத்தை பற்றிய மற்றொரு என் தேடலும் ஆரம்பமானது. சரியாக அதை விளங்கியும் கொண்டேன்.
சென்னையில் வாழும் தருமி அவர்கள் தான் எழுதிய 'மதங்களும் சில விவாதங்களும்,' 'My Road to Atheism from Christianity’ என்ற இரு புத்தகங்களையும் இலங்கைக்கு வந்திருந்த தன் மருமகனின் வாயிலாக எனக்கு கொடுத்து அனுப்பியிருந்தார். இன்று தான் புத்தகம் என் கைக்கு கிடைத்தது. அவரின் மதிப்புமிக்க கையெழுத்துடன் புத்தகம் கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
நான் எழுத்தாளன் என்று சொல்வதை காட்டிலும் வாசகன் என்று சொல்வதையே விரும்புவேன். அப்படிப்பட்ட ஒரு வாசகனாக தருமி அவர்களின் எழுத்து பணி மேன்மேலும் வளர என் ஆசை. வாழ்த்துகள்.